ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது தென் ஆப்ரிக்கா!

T20 WC 2021 South Africa Vs Australia Match Starts Today

T20 WC 2021 South Africa Vs Australia Match Starts Today

டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் சூப்பர் 12, குரூப் 1 பிரிவில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.

இன்றைய விறு விறுப்பான களத்தில், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அபுதாபி ஷேக் சையது மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி 3:30 மணி அளவிற்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 21 போட்டிகளில், பதிமூன்றில் ஆஸ்திரேலியாவும், எட்டில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றிகளை கண்டு இருக்கின்றன. தென் ஆப்பிரிக்க அணி, நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களம் இறங்கும் முதல் உலககோப்பை, எப்படி எதிர்கொள்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Australia Probable XI: David Warner, Aaron Finch (c), Mitchell Marsh, Steve Smith, Glenn Maxwell, Marcus Stoinis, Matthew Wade (wk), Ashton Agar/Pat Cummins, Mitchell Starc, Adam Zampa, Josh Hazlewood

South Africa Probable XI: Quinton de Kock (wk), Temba Bavuma (c), Aiden Markram, Rassie van der Dussen, David Miller, Dwaine Pretorius, Keshav Maharaj, Kagiso Rabada, Anrich Nortje, Tabraiz Shamsi, Lungi Ngidi.

” ஐபிஎல் முடிந்த அடுத்த கட்டத்தோடு, டி20 உலககோப்பை, அதே களம் என்பதால் அதே சூட்டோடு இருக்கும். களவீரர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author