ICC T20 WC 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது இங்கிலாந்து!

T20 WC 2021 West Indies Vs England 14th Match Preview

T20 WC 2021 West Indies Vs England 14th Match Preview

டி20 உலககோப்பை 2021-இன் இன்றைய இரண்டாவது போட்டியில், சூப்பர்12,குரூப் 1 பிரிவில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.

இன்றைய டி20 உலககோப்பை இரண்டாவது போட்டியில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பொல்லார்டு தலைமையிலான் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 18 போட்டிகளில் 11 போட்டிகளில் வென்று வெஸ்ட் இண்டீசே முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியை பொறுத்தவரை காட்டடியே செல்லுபடியாகும். ஏன் என்றால் எதிர்த்து விளையாடுவது வெஸ்ட் இண்டியன் பிளேயர்கள் அல்லவா. அடிக்கும் அனைத்து பந்துகளையும் கிரவுண்ட்டுக்கு வெளியில் விட்டால் மட்டுமே இங்கிலாந்தால் தாக்கு பிடிக்க முடியும்.

England Possible XI: Jason Roy, Jos Buttler, Moeen Ali, Jonny Bairstow, Eoin Morgan, Liam Livingstone, Chris Woakes, David Willey, Chris Jordan, Mark Wood, Adil Rashid

West Indies Possible XI: Evin Lewis, Lendl Simmons, Chris Gayle, Roston Chase, Shimron Hetmyer, Nicholas Pooran, Kieron Pollard, Andre Russell, Dwayne Bravo, Hayden Walsh, Obed McCoy

“ எப்படியும் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி இருக்கும். சரவெடியக வெஸ்ட் இண்டீஸ் வெடிக்கும். இங்கிலாந்தும் அதே அதிரடியைக் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author