ICC T20 WC 2021 | இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ்!
டி20 உலக கோப்பையின் பதினான்காவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களிலேயே தனது அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து வெறும் 55 ரன்களே எடுத்தது. அதற்கு பின் ஆடிய மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலக்கை துரத்திப் பிடித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் அடில் ரஷித் 2.2 ஓவர்களில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சிஎஸ்கே வீரர் மொயின் அலியும் நான்கு ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் ஓவருடன் இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களையும் அணிக்கு கைப்பற்றிக் கொடுத்தார்.
“ வெஸ்ட் இண்டீஸ் என்றதும் ஒரு மிகப்பெரிய இலக்கையே ரசிகர்கள் எதிர்பார்த்தனர், சிம்மன்ஸ், பொல்லார்டு, பிராவோ, ஹெட்மையர், பூரான் என்று அதிரடி பட்டாளங்களை வரிசையாக வைத்து கொண்டு வெறும் 55 ரன்களுக்குள் சுருண்டிருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது “