கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 16,071 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 24 10 2021

Corono Updates In India 24 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,071 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 559 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,54,301-ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 16,500 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 101 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 75.72 பேர் தானாகவே முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். வெகு விரைவில் தடுப்பூசிக்கு தகுதியுள்ள அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

“ 100 கோடி தடுப்பூசி உபயோகம் என்ற மைல் கல்லை சீனாவிற்கு அப்புறம் எட்டி இருக்கும் இரண்டாவது நாடு இந்தியா தான். முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்வோம். கொரோனோவை அகற்றிடுவோம் “

About Author