ICC T20 WC 2021 | வங்க தேசத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இங்கிலாந்து!

ICC T20 WC 2021 20th Match England Win Against Bangladesh

ICC T20 WC 2021 20th Match England Win Against Bangladesh

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபதாவது போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இங்கிலாந்து அணி!

முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் மில்ஸ் 3 விக்கெட்டுகளும், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது.

ஜேசன் ராய் மூன்று சிக்ஸ்சர்கள், ஐந்து போர்களுடன் 61(38) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அடித்தூணிட்டார். இது இங்கிலாந்து அணிக்கு சூப்பர் 8 பிரிவில் இரண்டாவது வெற்றி ஆகும், வங்கதேசத்திற்கு தொடர்ந்து இது அந்த அணி பெறும் இரண்டாவது தோல்வி ஆகும்.

“ குரூப் 1-யில் இரண்டு தொடர் வெற்றிகளுடன் இங்கிலாந்து அணி அசைக்க முடியாத அணியாகவும், குரூப் 2 வில் இரண்டு தொடர் வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி அசைக்க முடியாத அணியாகவும் உருவெடுத்திருக்கிறது. இனி அடுத்தடுத்த மேட்ச்களில் இந்திய அணி தொடர் வெற்றிகளை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. காரணம் இந்திய அணியின் பிரிவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட்டை +6.5-யில் வைத்து ஒரு வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது “

About Author