ICC T20 WC 2021 | த்ரிலிங்கான போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

ICC T20 WC 2021 23rd Match Westindies Win Against Bangladesh

ICC T20 WC 2021 23rd Match Westindies Win Against Bangladesh

ஐசிசி டி20 உலககோப்பையின் 23-ஆவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 12 பிரிவில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிகோலஸ் பூரான் 40(22) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய வங்க தேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கடைசி ஓவரில் வங்கதேசத்துக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு கேட்ச் மிஸ், ஒரு ரன் அவுட் சான்ஸ், ஒரு பீல்டு மிஸ் என்று ஒரே ஓவரில் மூன்று முறை மேற்கிந்திய தீவுகளின் அணி வீரர்கள் சொதப்பிய போதும், ரஸ்சல் அதை தனது அருமையான பந்து வீச்சால் சரி கட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

“ தொடர் இரு தோல்விகளுக்கு பிறகு கரீபீயன் சிங்கங்கள், சூப்பர் 12 பிரிவில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர் “

About Author