கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,451 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 08 11 2021

Corono Updates In India 08 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,61,057 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 13,204 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 109 கோடியை நெருங்கி வருகிறது. தேசத்தில் 100 பேருக்கு தலா 81.03 பேர் தானாகவே முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள விளைகின்றனர்.

“ விடாத மழை, ஏறியும் இறங்கியும் வரும் கொரோனோ தொற்று, பண்டிகைகளை சமூகத்துடன் கொண்டாட முடியாத நிலை இதையெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுக்கு, ஒட்டு மொத்தமாய் சமாளித்திட, நிச்சயம் மக்களிடம் ஒரு மனதிடம் வேண்டும் “

About Author