கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,126 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 09 11 2021

Corono Updates In India 09 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 332 தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,61,389 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 11,982 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 110 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. 133 கோடி பேருக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் 100 பேருக்கு தலா 81.26 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.

“ ஒரு பக்கம் கொரோனோ இடர், இன்னொரு பக்கம் இயற்கையின் பேரிடர் என்று தேசம் ஒட்டு மொத்தமாய் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது “

About Author