கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி – Barathi Kannamma today episode 09.11.2021 review
Barathi Kannamma Shock divorce notice
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா லட்சுமியோடு பாரதியின் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு பாரதி நக்கலாக பேசுகிறார். கண்ணம்மாவிற்கு நடக்கும் சம்பவங்களுக்கு உறுதியான இதயம் தேவை என ஒரு மருந்தும் தருகிறார். கூடவே இன்றைய நாள் திருமணத்திற்கும் விவாகரத்திற்கு உகந்தநாள் எனக் கூறுகிறார். கண்ணம்மாவுக்கு குழப்பம் அதிகரிக்கிறது.
வெண்பா தன்னுடைய வழக்கறிஞரிடம் எரிந்து விழுகிறார். லாக்கப்பில் உணவு சரியில்லை, காற்று வரவில்லை என விடுதி விமர்சனம் போல் ஏதேதோ கூறுகிறார். கண்ணம்மா தனது வீட்டிற்கு வரும் தபாலை பிரித்துப் பார்த்தால், அது விவாகரத்து நோட்டீஸ் அதிர்ச்சியில் கண்ணம்மா அழுகிறார். தன்னுடைய குழந்தையை இனி பார்க்க முடியாதோ லக்ஷ்மியை பாரதியோடு சேர்க்க முடியாது என்றெல்லாம் யோசிக்கிறார்.
பாரதி லாக்கப்பில் இருக்கும் வெண்பாவிடம் இந்த விவாகரத்தை பற்றி கூற அவர் மகிழ்ச்சி அடைகிறார். கடைசியாக ,வீட்டிற்கு வரும் பாரதி அவரது குடும்பத்தினரிடம் அவரது முடிவை கூற அவர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள்.