கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,350 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 13 12 2021

Corona Updates In India 13 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,350 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 202 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,75,736 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 7,973 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 133 கோடி என்ற நிலையை அடைந்து இருக்கிறது. ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை 38 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

“ புதிய புதிய தொற்றுகள் உலகெங்கிலும் பரவி வரும் நிலையில், மீண்டும் மக்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் நிலவி வருகிறது. ஆதலால் தொடர்ந்து முகக்கவசம் அணிந்திடுங்கள். தற்காத்துக் கொள்ளுங்கள் “

About Author