விஜய் ஹசாரே ட்ராபி | Qualifier 2 | ‘கர்நாடகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி’

Vijay Hazare Trophy Tamilnadu Win Against Karanataka And Qualified To Semi Final

Vijay Hazare Trophy Tamilnadu Win Against Karanataka And Qualified To Semi Final

விஜய் ஹசாரே ட்ராபியின் குவாலிபையர் 2-வில் கர்நாடகாவை அதிரடியாக வென்று அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது தமிழக அணி.

கர்நாடகாவுக்கு எதிரான குவாலிபையர் 2-வில் முதலில் பேட் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கர்நாடக அணி தமிழக அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், வெறும் 203 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

தமிழக அணி சார்பாக பேட்டிங்கில் ஜகதீசன் 102(101), சாய் கிஷோர் 61(71), ஷாருக்கான் 79(39) எடுத்து அணியை ஒரு நல்ல ஸ்கோர்க்கு எடுத்துச் செல்ல உதவினர். பவுலிங்கில் சிலம்பரசன் எட்டு ஓவர்கள் வீசி 36 ரன்கள் எடுத்து நான்கு முக்கியமான விக்கெடுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.

” ஐந்து முறை விஜய் ஹசாரே ட்ராபியை கைப்பற்றி இருக்கும் தமிழக அணி தனது எண்ணிக்கையை ஆறாக உயர்த்துமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இதுவரை அதிக முறை விஜய் ஹசாரே ட்ராபியை கைப்பற்றியிருக்கும் அணியும் தமிழக அணி தான் என்பது குறிப்பிடத்தக்கது “

About Author