Mouna Ragam 2 Today Episode | 24.12.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, தருண் மனோகர் தருண் மூவரும் வருணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு டாக்டர் வருணை மயக்கம் மற்றும் ஆழ்ந்த நிலையில் படுக்க வைத்தார். அந்த நிலையிலும் வருண் தன் அம்மா தன்னை பார்த்துக்கொண்டதையும், அவர் நெருப்பில் எப்படி துடித்தார், எப்படி இறந்தார் என்று அனைத்தையும் நினைவில் வைத்து சொன்னார். பின் சத்யாவை நினைத்து வருத்தம் கொண்டார். அவரை எவ்வளவு நேசிக்கிறார் என்றும் கூறினார். சத்யாவை போல தன் அம்மாவும் தனக்கு பாட்டுபாடியே தூங்க வைப்பர் என கூறினார். பின் டாக்டர் வேறு மாத்திரை தருவதாக கூறினார். அவருக்கு இது மருந்து மாத்திரையில் சரி ஆகாது, அவருக்கு பாசம் மற்றும் தன் அம்மா போல தனக்கு ஒரு நல்ல உறவு பாசம் வேண்டும் என்றும் கூறினார். சுருதி தான் தான் இந்த விருதை வாங்க போகிறோம் என்று எண்ணி தன் நண்பர்களுக்கு பார்ட்டி எல்லாம் ஏற்பாடு செய்தார்.கார்த்திக் ஆனால் எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை. சத்யா தான் சுருதி வீட்டிற்க்கு செல்ல மனோகரிடம் கேட்டார்.அவர் என்ன சொன்னார் அதற்கு? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…