விஜய் ஹசாரே ட்ராபி | Semi Final 2 | சவுராஸ்டிரா அணியை வென்றது தமிழக அணி!

Vijay Hazare Trophy Semi Final 2 Tamilnadu Win Against Saurashtra

Vijay Hazare Trophy Semi Final 2 Tamilnadu Win Against Saurashtra

விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சவுராஸ்டிரா அணியை அதிரடியாக வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது தமிழக அணி.

முதலில் ஆடிய சவுராஸ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தமிழக அணி கடைசி பாலில் இலக்கை எட்டி திரிலிங்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழக அணி.

தமிழக அணி சார்பில் பாபா அபர்ஜித் 12 போர்கள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 122(124) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். வாஷிங்டன் சுந்தரும் தனது பங்குக்கு 70(61) ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

” இது வரை நான்கு முறை கோப்பையை தன் வசப்படுத்தி இருக்கும் தமிழக அணி ஐந்தாவது முறையாக வென்றிடுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author