பிக்பாஸ் 5 தமிழ் | Day 91 | Promo 1 | ‘அன்பை ஆயுதமாக உபயோகிக்கிறா பிரியங்கா?’
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வார கடைசி எபிசோடு, முதல் புரோமோ கமல்ஹாசன் அவர்களின் முகமாக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. வெற்றி பெறுவதற்காக அன்பை ஆயுதமாக உபயோகிக்கிறா பிரியங்கா என்ற கேள்விக்கு அன்பு என் வெற்றிக்கு காரணமாக இருக்குமானால் இருந்து விட்டு போகட்டுமே என பதில் அளிக்கிறார் பிரியங்கா.
“ எதுவாக இருந்தாலும் அளந்தே காட்ட வேண்டும் என்பது இந்த பிக்பாஸ் இல்லத்தில் விதிக்கப்படாத விதிமுறை. அந்த விதிமுறை அன்பிற்கும் உண்டு என்பது யாராக இருந்தாலும் அறிந்தாக வேண்டும் “