ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 2,630 ஆக உயர்ந்தது!

Omicron Updates In India 06 01 2022

Omicron Updates In India 06 01 2022

தற்போது வரை இந்தியாவில் 2,630 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 797 பேருக்கும், டெல்லியில் 465 பேருக்கும், ராஜஸ்தானில் 236 பேருக்கும், கேரளாவில் 234 பேருக்கும், கர்நாடகாவில் 226 பேருக்கும், தமிழகத்தில் 121 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 2,630 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

“ ஒரு பக்கம் கொரோனா ஒரு லட்சத்தை நெருங்கி வரும் வேளையில் இன்னொரு பக்கமும் ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதால் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது “

About Author