கொரோனா நிலவரம் | இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

Corona Updates In India 07 01 2022

Corona Updates In India 07 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,17,100 ஆக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,178 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேசத்தில் பன்மடங்காக கொரோனா உயர்ந்திருப்பது மூன்றாவ்து அலைக்கான அறிகுறியாக கருதப்படுகிறது “

About Author