Raja Rani 2 Today Episode | 13.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமியின் சமையலை அவர் சொல்லும் குறிப்பை தனது வலைதள பக்கத்தில் போட நினைத்தார் ஹென்னா. அதனால் சிவகாமி கூடவே இருந்து அவர் செய்வதை கற்றுக்கொண்டு, அவர் செய்வதை வீடியோவும் எடுத்தார். அதற்கு சல்மா உதவி செய்தார். சிவகாமி செய்த வத்த குழம்பு அருமையாக இருப்பதாக கூறினார்கள். இதை பார்த்த அர்ச்சனா இந்த கூட்டணியை முதலில் பிரிக்க வேண்டும் என்று நினைத்தார். பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிவகாமியிடம் பேசினார். சமையல் குறிப்பு , பக்குவம் அனைத்தையும் இப்படி சொல்லி விட்டீர்களே, அதற்கு அவர்கள் காசு வாங்கி கொள்வார்கள் நீங்கள் நம் வீட்டு சமையல் ரகசியத்தை எதற்காக சொன்னீர்கள் என்று கேட்டார். ஆனால் சிவகாமி அதெல்லாம் எந்த பிரச்சனையும் வராது சந்தியா பார்த்துக்கொள்வார் என்று கூறினார். பின் சல்மா மற்றும் ஹென்னா இருவரும் சரவணன் கடைக்கு சென்று அவர் செய்த பலகாரங்களை சுவைத்து பார்த்து ஆச்சர்ய பட்டார்கள். பின் ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள். சரவணன் அதற்கு என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author