கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கியது’

Corona Updates In India 21 01 2022

Corona Updates In India 21 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,47,254 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 703 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,88,396 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இருபது லட்சத்தை கடந்து இருக்கிறது

About Author