கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 28 01 2022

Corona Updates In India 28 01 2022

நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,51,209 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 627 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,92,327 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் கடந்த ஒரிரு நாட்களாகவே குறைந்து வந்த நிலையில் தற்போது 15.8 சதவிகிதமாக இருக்கிறது “

About Author