சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியாகும் தேதியை அறிவித்து இருக்கிறது படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’டான்’ திரைப்படம், மார்ச் 25 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

ரசிகர்கள் என்ற ஒரு கூட்டத்தை மட்டும் தன் பக்கம் இழுக்காமல், சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று அனைவரையும் தன் படத்தின் பக்கம் இழுத்து வைத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன், அதுவே அவரின் வெற்றிக்கும் பெரிதும் காரணம் “

About Author