கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2 லட்சத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று’

Corona Updates In India 01 02 2022

Corona Updates In India 01 02 2022

இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு 2 லட்சத்திற்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,67,059 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 1,192 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,96,242 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ ஒரு பக்கம் கொரோனா புதிய தொற்றின் விகிதம் குறைந்து வந்தாலும் கூட, இன்னொரு பக்கம் இறப்பின் விகிதம் கூடி வருகிறது “

About Author