TNPSC தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது!
ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி-யில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம்.
டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கனவே பதிந்து தனிக்கணக்கு வைத்து இருப்பவர்களை ஆதார் எண்ணை அப்டேட் செய்ய சொல்லி சில நாட்களாகவே தேர்வாணையம் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தனிக்கணக்கு வைத்து இருக்கும் தேர்வாளர்களை ஆதார் அப்டேட் செய்ய சொல்லி கெடு விதித்து இருக்கிறது.
“ மத்திய அரசு ஒரு பக்கம், எல்லாவற்றிலும் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி பாடாய் படுத்தி வரும் சூழலில், தற்போது மாநில அரசும் ஆரம்பித்து விட்டது “