கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி தொற்று’

Corona Updates In India 13 02 2022

Corona Updates In India 13 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 44,877 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,877 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 684 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,08,665 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்ச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5,37,045 ஆக குறைந்து இருக்கிறது. தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் 3.17 சதவிகிதமாக குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author