கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 34,113 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates in India 14 02 2022

Corona Updates in India 14 02 2022

இந்தியாவில் நேற்று மட்டும் 34,113 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 34,113 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 346 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,09,011 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,78,882 ஆக குறைந்து இருக்கிறது. நாளுக்கு நாள் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து வருகிறது “

About Author