ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் மாமனார், மாமியார் புகைப்படத்தை வாங்கி தன் அறையில் மாற்றினார். அதை பார்த்த சந்தியா உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தன் அப்பா இறப்பதற்கு முன் தன் கணவரை பார்த்தது இன்னும் மெய் சிலிர்க்கிறது என்று கூறினார். சரவணன் , அவருக்கு என்ன ஆடை இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை என்று கூறினார். பின் சந்தியவிடம் நாளை பாராட்டு விழாவில் பேச ஒரு குறிப்பு எழுதி தருமாறு கேட்டார். சந்தியாவும் அவருக்காக எழுதி கொடுத்தார். சந்தியாவுக்காக ஒரு புடவை வாங்கி வந்து பரிசாக கொடுத்தார் சரவணன். பாராட்டு விழாவுக்கு இதை தான் அணிய வேண்டும் என்று கூறினார். சந்தியா வும் ஆசையாக அதை வாங்கினார். சந்தியா குறிப்பு எழுதிய கடிதத்தை மேஜை மேல் வைத்து உடை மாற்ற சென்றார். சரவணன் தவறுதலாக சந்தியாவின் கனவு என்ன என்று எழுதிய கடித்ததை எடுத்து சென்றார். அர்ச்சனா தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று செந்திலிடம் கேட்டார். அவர் அதற்கு கடவுள் மட்டும் தான் பதில் சொல்ல முடியும் என்றார். உடனே கடவுளிடம் கேட்கிறேன் என்று சீட்டு எழுதி போட்டார் அர்ச்சனா. அதில் பெண் குழந்தை பிறப்பதாக வந்தது. அதை பார்த்ததும் அர்ச்சனா உடனே எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்றார். அதெல்லாம் நம் கையில் இல்லை என்று கூறினார் செந்தில். அதெல்லாம் முடியாது, நான் ஸ்கேன் செய்றப்போ என்ன குழந்தைனு கேட்பேன் என்றார். அதெல்லாம் சட்டபடி குற்றம் என்றார் செந்தில். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…