ஈரான் மற்றும் ரஷ்யாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ பலிகள்!

இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் ஓயாத கொரோனோ அலை மறுபடியும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஈரானில் நேற்றைய நிலைப்படி 39,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 546 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் 22,160 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளதாகவும் 769 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து உலக நாடுகளை பயமுறுத்திவரும் இந்த கொரோனோ என்று தான் ஓய்ந்து இந்த உலகை பழைய சூழலுக்கு கொண்டு வரும் என்று தெரியாத நிலையில் மறுபடியும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.தொடர்ந்து உருமாறி வருகின்ற கொரோனோவை எதிர் கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தாலும் கொரோனோவின் கைகளே மேலோங்கி இருக்கிறது.

“ தனிமனிதன் தனக்கு விதித்த கொரோனோ விதிமுறைகளை மீறும் போது தான் சமூகம் இத்தகைய விளைவுகளை சந்திக்கிறது, தனி ஒரு மனிதனாய் நாம் நமக்கு விதித்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிப்போம் முகக்கவசம் அணிவோம் சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்போம் “ 

About Author