தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அவர்களது நிலையை நினைத்து வருந்தினார்கள். சொந்த வீட்டிலே ஒரு வேண்டாத அகதியை போல் வாழ்வதாக நினைத்தார்கள். யாரும் அவர்களை ஒரு பொருளாக கூட மதிக்கவில்லை என்று வருந்தினர். பின் இந்த நிலையை எப்படியும் கூடிய சீக்கிரம் மாற்ற வேண்டும் என்றும், தான் ஒரு நல்ல மருமகள் என்று பெயரும் எடுப்பேன் என்று சரஸ்வதி முடிவு எடுத்தார். பின் அடுத்த நாள் கார்த்திக் கம்பேனிக்கு கிளம்பினார். அப்போது வசுந்தரா சரஸ்வதியுடன் எப்படி எசாமல் இருப்பது என்று வருந்தினார். அதே நேரம் தமிழும் கிளம்பினார். அவர் கிளம்பும் நேரம் கோதை நடேசன் என்று அனைவரிடமும் கில்மாபுவதாக கூறினார். ஆனால் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. தமிழ் கம்பேனிக்கு சென்றதும் தொழிலாளர்கள் அனைவர் அவரை பார்த்து பேசினார்கள் வணக்கம் வைத்தார்கள். ஆனால் கார்த்திக் செல்லும்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. பின் வியாபாரம் விஷயமாக பேச ஆற்காடு பாய் வந்து இருந்தார். ஆனால் அவர்களை கார்த்திக் மதிக்கவே இல்லை. அவர்களை ஒரு பொருட்டாக கூட பார்க்காமல் எடுத்து எரிந்து பேசினார். உடனே பாய் இது சரியாக வராது என்று கிளம்பினார். கிளம்பும்போது தமிழை பார்த்து நடந்ததை கூறினார். உடனே தமிழ் நான் கார்த்திக் இடம் பேசுகிறேன் என்று கூறினார். ஆனால் அவர்களை விட மட்டமாக நடத்தப்பட்டார் தமிழ். கார்த்திக் தான் தான் இந்த பதவியில் இருப்பதாக கூறி தமிழை மட்டமாக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…