ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சிவகாமி பேசிய அனைத்தையும் நினைத்து பார்த்தார். இந்த குடும்பத்தில் இருந்துகொண்டு போலீஸ் ஆக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறாது. அது இந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுத்துவிடும் என்று பயந்தார். அதனால் தான் தனது கனவை லட்சியத்தை கை விட போவதாக அவரது அம்மா அப்பா புகைபடத்திடம் பேசினார். அதை சரவணன் இதை பார்த்துவிட்டு மீண்டும் அவரது முடிவை கூறினார். எந்த தடை வந்தாலும் யார் தடுத்தாலும் சந்தியா கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார். ஆனால் சந்தியா அதெல்லாம் வேண்டாம், எனக்கு இந்த குடும்பத்தின் சந்தோசம் தான் முக்கியம் என்றார். அர்ச்சனா அவர் கேள்விப்பட்ட சித்தரை பார்க்க சென்றார். அங்கு கூட்டம் கூட்டமாக ஆட்கள் வருவதை பார்த்து, அவர் ஆசிர்வாதம் செய்தால் உடனே நினைத்தது நடந்தது விடும் என்று நம்பினார். அவரிடம் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினார். அவரும் தனக்கு 10000 பணம் தந்தால் தான் மட்டும் தான் ஆசிர்வாதம் செய்வேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சியில் இருந்தாலும் எப்படியாவது அந்த ஆசிர்வாதம் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். வீட்டுக்கு வந்து தன்னிடம் இருக்கும் பணத்தை பிரட்டி பார்த்ததில் 5000 மட்டுமே தெரியாது. அதனால் மீதி 5000 அவரது அறையில் தேடி பார்த்தார். இன் செந்தில் சட்டைகளில் தேடினார். அப்படியும் கிடைக்கவில்லை. அதனால் நேராக செந்தில் இடம் தான் ஒரு வேண்டுதல் வைத்து இருப்பதாகவும் அதற்கு 5000 பணம் வேண்டும் என்றும் கூறினார். ஆனால் செந்தில் அதெல்லாம் இவளோ செவ்வாய் செய்ய முடியாது என்று வெறும் 100 ரூபாய் மட்டுமே கொடுத்தார். ஆனாலும் அர்ச்சனா விடாமல் யோசித்தார். எப்படியாவது பணம் பிரட்டி அந்த ஆசீர்வாதத்தை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…