ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன்னை திருடி என கூறிவிட்டாள் என்று கூறி மஞ்சு பெரிய பிரச்சனை ஆக்கிவிட்டார். இதனால் காவ்யாவின் அம்மாவும் மஞ்சுவிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் மஞ்சு மனம் மாற வில்லை. பின் பார்வதி அவரை சமாதானம் செய்வதாக கூறினார். ஜீவா காவ்யா மீது கோவத்தில் இருந்தார். அது எப்படி என் அத்தையை பார்த்து அப்படி சொல்ல முடிந்தது என்று கடிந்துகொண்டார். காவ்யா அவரிடமும் மன்னிப்பு கேட்டார். தான் செய்தது தவறு தான் என்று கூறினார். பின் ஜீவா அவரை சமாதானம் செய்தார். பிரியாவின் முகூர்த்த புடவைக்கு உள்ள ப்ளவுசை மறந்து ஊரில் வைத்து வந்த விஷயம் தெரிய வந்தது. உடனே என்ன செய்வதென தெரியாமல் முளித்தார்கள் காவ்யா மற்றும் பிரியா. பின் ஜீவாவிடம் உதவி கேட்டார் காவ்யா. பிரியா வை இரவில் யாருக்கும் தெரியாமல் வெளியே அழைத்து செல்ல தயார் ஆனார் ஜீவா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…