தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி இன்று என் பரீட்சையை கண்டிப்பாக எழுதுவேன் என்று வைராக்கியமாக எழுத கிளம்பினார். கோதை வீட்டில் நடப்பதை தெரிந்துகொள்ள சந்திரகலா அப்போ அப்போ வசுந்தராவுக்கு அழைத்து பேசி தெரிந்துகொண்டார். சரஸ்வதி பரீட்சையில் வெற்றி பெற்றால் அது அவளுக்கான முதல் வெற்றியாக மாறிவிடும். அதை விட கூடாது என்று முடிவு எடுத்தார். சரஸ்வதி வருகைக்காக சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் பள்ளி வாசலிலே காத்திருந்தார்கள். சரஸ்வதி வந்ததும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் சரஸ்வதி அவர்களிடம் பேச தயங்கினார். பின் சொக்கலிங்கம் வாசுகி இருவரும் பேசவைத்து அவரை ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்கள். அப்போது சரஸ்வதிக்கு உடம்பு அனலாய் கொதித்தது தெரிய வந்தது. இந்த நிலையில் எதற்காக தேர்வு எழுத வேண்டும் என்று சொக்கலிங்கம் கேட்டார். அடுத்த முறை எழுதிக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் சரஸ்வதி தன் சபதத்தில் உறுதியாக இருந்தார். பின் தேர்வு அறைக்கு சென்றார். சரஸ்வதி இருக்கும் அறைக்கு வாசுகி தான் வந்தார். சரஸ்வதி காய்ச்சலில் கஷ்டப்படுவதை பார்த்து நொந்து போனார். கோதை வீட்டில் பதட்டத்தில் இருந்தார். சரஸ்வதி உடம்பு முடியாமல் தேர்வு எழுத சென்றதால் அந்த பதட்டம். வசுந்தரா இதனால் உடனே தமிழுக்கு அழைத்து விசாரித்தார். சரஸ்வதி என்ன செய்கிறார் என்று. தமிழும் அதற்கு தேர்வு முடிய போவதால் இன்னும் சற்று நேரத்தில் சரஸ்வதி வந்து விடுவார் என்று கூறினார். இதை கோதை தான் விசாரித்தார் என்று தெரிந்ததும் தமிழ் மிகவும் சந்தோசமாக இருந்தார். சரஸ்வதி தேர்வை ரொம்ப நல்லா எழுதி இருப்பதாக கூறினார் . பின் கோதை விசாரித்தது தெரிந்து சந்தோசமாக இருந்தார். பின் வீட்டுக்கு கிளம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..