Eeramana Rojave 2 Today Episode | 24.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரை இந்த ஊர் காரர்கள் ஒரு முடிவு செய்துள்ளார்கள் என்று அருணாச்சலம் இடம் பேசினார். என் பெரிய மகள் செய்த காரியத்துக்கு பரிகாரமாக என் இரண்டாவது மகளுக்கு பார்த்திபனை திருமணம் செய்து வைக்க கேட்டுக்கொண்டார். அருணாச்சலம் துரையின் நிலையை பார்த்து அவரும் பார்த்திபனிடம் பேசி பார்ப்பதாக கூறினார். பின் காவ்யாவிடம் துரை பேச வந்தார். இந்த வீட்டு மானத்தை நீதன காப்பாற்ற வேண்டும் என்றார். பிரியா செய்தது போல் என்னை நீயும் கஷ்ட படுத்தாதே என்று கெஞ்சினார். காவ்யா காலில் விழுந்து கெஞ்சினார் துரை. இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காவ்யா தன் அப்பவே காலில் விழுந்து இப்படி கெஞ்சும் போது அவரால் எதுவுமே பேச முடியவில்லை. அவர் வேறு வழி இன்றி இந்த திருமணத்திற்கு சம்மதித்தார். உடனே காவியாவை மணப்பெண் போல் அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் ஆரம்பம் ஆனது. ஆனால் தேவி இன்னமும் ரம்யாவை தேடி அலைந்தது கொண்டு1 இருக்கிறார். ஜீவா மண்டபத்திற்கு வந்து கொண்டு இருக்கும்போது வழியில் ஒரு விபத்து. அந்த வண்டியில் பிரியாவை கட்டிப்போட்டு இருந்தார்கள். அதனால் அந்த நபருடன் சண்டை போட்டு பிரியாவை காப்பாற்றினார். உடனே மண்டபத்துக்கு விரைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author