ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இடம் அருணாச்சலம் காவ்யாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பார்த்திபனும் அதில் விருப்பம் இல்லை என்று கூறினார். பின் அருணாச்சலம் பேசியதால் அதை கேட்டு மனம் மாறி திருமணத்துக்கு சம்மதம் சொன்னார். அதே நேரம் காவ்யா அலங்காரம் செய்து திருமணத்துக்கு தயார் ஆக்கினார்கள். பார்த்திபன் மற்றும் காவ்யா இருவரும் இணைந்து மனமேடையில் அமர்ந்தார்கள். செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்தார்கள். ஜீவா பிரியாவை எப்படியாவது முகூர்த்தம் முடிவதற்குள் மண்டபத்துக்கு கூட்டி வர வேண்டும் என்று அவசரமாக கூட்டி வந்தார். காவ்யா ஜீவா வந்து விட மாட்டாரா என்று வாசலை ஏக்கமாக பார்த்தார். இதுவரை அவரின் காதல் வாழ்கையில் நடந்த அனைத்தயும் நினைத்து பார்க்கிறார் காவ்யா. எப்படி திருமணம் நடக்க வேண்டுமென்று திட்டம் போட்டது என்று அனைத்தையும் நினைத்து கண் கலங்கினார். ஜீவா பிரியாவை அழைத்து வந்தார். அதே நேரம் பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலியை காட்டினார். பிரியா ஜீவா இருவருமே அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…