Raja Rani 2 Today Episode | 29.03.2022 | Vijaytv
Raja Rani 2. 29.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அறைக்குள் வரும்போது சந்தியா தையல் பிலகிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைந்தார். இது கண்டிப்பாக அம்மாவின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்தார். உங்கள் கவனம் படிப்பு பக்கம் போக கூடாது என்று நினைத்து அம்மா தையல் பழக வேண்டும் என்று சொல்லி இருப்பார் ஆனால் தி பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கூறினார். சந்தியாவை படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். கோச்சிங் சென்டர் சென்று வந்த விஷயம் வீட்டுக்கே தெரியாது, இப்படியே தினமும் போய் வரலாம் என்று கூறினார் சரவணன். ஆனால் சந்தியா அதை நினைத்து பயந்தார். அடுத்த நாள் சரவணன், தன் கடையில் வேலை அதிகமாக இருப்பதாக கூறினார். உடனே சிவகாமி வேறு ஒரு ஆள் உதவிக்கு வைத்துக்கொள்ளும் படி கூறினார். பின் சந்தியாவை அழைத்து செல்லவும் கூறினார். சரவணன் அவர் போட்ட திட்டப்படி தினமும் கடைக்கு கூட்டி செல்வது போல் கோச்சிங் சென்டர் செல்ல திட்டம் போட்டு இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…