ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பார்த்திபன் இடம் உதவி கேட்டார். நீதான் எப்படியாவது ஜீவாவை இந்த திரும்பதிற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பார்த்திபன் முதலில் தயங்கினார். ஆனால் கடைசியில் அவரும் நான் ஜீவாவை பார்த்து பேசிபார்க்கிரேன் என்று கூறினார். பின் ஜீவா தனியாக அழுது கொண்டு இருப்பதை பார்த்து பதரிப்போனார். பின் பிரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஜீவா அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார். ஆனால் பார்த்திபன் பிரியா நல்ல குணத்திற்கு இது போல் ஒரு நிலையில் கை விடுவது நம் குடும்பத்துக்கு பெரிய பழிச்சொல் ஆகும் என்றார். இந்த நிலையில் மாற்ற உன்னால் முடியும். பெற்றவர்களுக்கு அதுவே மரியாதை என்று எடுத்து கூறினார். இதை கேட்ட ஜீவா வேறு வழி இன்றி சம்மதம் சொன்னார். உடனே திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்தது. காவ்யா ஜீவாவை பார்த்து பேசினார். இந்த திருமணத்தை நிறுத்த சொன்னார். அதான் பிரியா வந்துவிட்டாளே இனி பார்த்திபன் மாமாவுக்கே அவளை திருமணம் செய்து வைக்கட்டும் என்றார். இப்போவே ஊர்காரர்கள் முன் நம் காதல் விஷயத்தை சொல்லலாம் என்று காவ்யா அழைத்தார். ஆனால் ஜீவா வர மறுத்துவிட்டார். இப்போதே இந்த தாலியை கழட்டி வை, பின் நம் காதலை பற்றி சொல்லலாம் என்றார். பின் காவ்யா தாலியை கழட்ட ஆரம்பித்தார். ஆனால் அவரது அப்பாவின் முகம் வந்து போனதால் அதை செய்ய முடியவில்லை. அதனால் ஜீவா நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இதுதான் கடவுள் கொடுக்கும் வாழ்க்கை. இதுவரை நடந்ததை மறந்துவிட்டு புது வாழ்க்கையை ஆரம்பி என்றார் ஜீவா. பின் பிரியாவை அலங்காரம் செய்துவிட்டார்கள். ஜீவா திருமணத்திற்கு தயார் ஆனார். இருவரும் மணமேடையில் அமர்ந்தார்கள். இதை பார்க்கும் சக்தி காவ்யாவுக்கு இல்லை. நொறுங்கி போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…