ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கோச்சிங் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். சந்தியா இன்று என்ன நடந்தது என்று கூறினார். தன்னை பற்றி இனி யாரும் கேலி கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று கூறினார். பின் நடந்ததை விவரமாக கூறினார். அப்போது வழியில் எண்ணெய் ஊற்றி கிடப்பதை பார்க்காமல் வண்டி ஓட்ட, அதில் வழுக்கி விழுந்தார்கள். அதில் அவர்கள் துணி முழுவதும் நாசம் ஆனது. பின் இதே போல் யாரும் கீழே விழுகக்கூடாது என்று கூறினார் சந்தியா. பின் அருகில் இருந்த மண்ணை அதில் தூவி விட்டார்கள். இதை பார்த்த ஒருவர் அவரை பாராட்டினார். இன்னொருவர் அவர்களை ஃபோட்டோ எடுத்தார். பின் வீட்டுக்கு அவசரமாக கிளம்பினார்கள். அடுத்த நாள் சரவணன் சந்தியா இருவரும் செய்த விஷயம் பேப்பரில் வந்தது. அதை பார்த்து ரவி மறைக்க நினைத்தார். உடனே அதை ஆதி சிவகாமி முன் படித்து காட்டினார். சிவகாமி இதனால் கோவத்தில் கொந்தளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…