டாடா ஐபிஎல் 2022-யின் 12 ஆவது போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது லக்னோ அணி.
முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து இலக்கை நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணி வீரர்கள் நிலைத்து நின்று வெற்றியை நோக்கி ஆடாமல் வந்தோம் போனோம் என்ற கணக்கிலேயே ஆடி ஆட்டத்தை கோட்டை விட்டனர்.
“ லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி, நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ஆவேஷ்கான் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “