தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பரிட்சை ரிசல்ட் வரும் நாள் இது. அதனால் சரஸ்வதி பதட்டமாக கிளம்பி கம்பேனிக்கு வந்தார். பின் மணி ஆனதும் உடனே சரஸ்வதியின் ரிசல்ட் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் அனைவரும். இந்த நிலையில் சந்திரகலா எப்படியும் சரஸ்வதி பாஸ் ஆக போவது இல்லை என்று உறுதியாக இருந்தார். அதனால் இனி அவள் ஆட்டம் செல்லாது, தமிழும் சரஸ்வதியும் எங்கேயாவது ஓட விட வேண்டும் என்று யோசித்தார். சற்று நேரத்தில் ரிசல்ட் பார்த்ததில் சரஸ்வதி அதில் பாஸ் ஆகி 85% எடுத்து இருந்தார். இதனால் தமிழ் சரஸ்வதி நமச்சி மற்றும் வேலை பார்க்கும் மற்றவர்களும் சந்தோசமாக இருந்தார்கள். உடனே சரஸ்வதி தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறி நேராக கார்த்திக்கை பார்க்க சென்றார். இனி இந்த சீட்டில் என் புருஷன் தான் அமர வேண்டும். அவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று கூறினார். கார்த்திக் வாய் அடைத்து போனார். என்ன நடக்கிறது என்றே புரியாமல் நின்றார். ஆனால் தமிழ் எனக்கு இந்த சீட்டில் எப்போதும் ஆசை வந்தது இல்லை. இதில் நீயே இரு என்று கூறி கிளம்பினார். சந்திரகலா சரஸ்வதி பாஸ் ஆனதை கேள்விப்பட்டு கோவத்தில் கொந்தளித்தார். எப்படி என்னிடம் காசு வாங்கி விட்டு இப்படி துரோகம் செய்தார் என்று ஒன்றும் புரியாமல் நின்றார். அப்போது அங்கு வந்த அந்த நபர், சந்திரகலா கொடுத்த 7 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்து, இது போல் காரியத்தை இனி செய்ய வேண்டாம் என்று எச்சரித்தார். சரஸ்வதி என் வாத்தியார் சொக்களின்கத்தின் மகள், அவருக்கே துரோகம் எப்படி செய்ய முடியும் என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…