Tamizhum Saraswathiyum Today Episode| 07.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி +2 பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதால் சந்தோசமாக இருந்தார். தமிழ் சரஸ்வதியை வெளியே சென்று சாப்பிடலாம் என்று அழைத்தார். உடனே சரஸ்வதி கோதை குரலில் பேச ஆரம்பித்தார். வீட்டில் உடலுக்கு சத்தான அத்தனை வகை சாப்படும் இருக்கும்போது எதற்காக வெளியே சாப்பிட வேண்டும் என்று கூறினார். பின் கோதை பேசும் அத்தனை வசனங்களையும் அவரை போலவே பேசினார். இதை கோதை மற்றும் நடேசன் பார்த்தார்கள். நடேசன் பார்த்து ரசித்தார். உன்னை போலவே பேசி அசத்துகிறார் என்று பெருமையாக கூறினார். ஆனால் கோதைக்கு அதில் உடன்பாடு இல்லை. இதெல்லாம் ஒரு திறமையா? இதெல்லாம் சரஸ்வதி திமிரில் செய்கிறாள் என்று கூறினார். சரஸ்வதியின் பேச்சை கேட்டு தமிழ் ஆச்சர்யமாக பார்த்தார். பின் வீட்டில் அனைவரும் சாப்பிடும் போது தனக்கு தோசை வேண்டாம் ஊத்தாப்பம் வேண்டும் என்றார். அபி அதை செய்யும்போது, அருகில் எட்டி பார்த்து அதை எப்படி ருசியாக செய்ய வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார். அதை கேட்டு நடேசன் வசுந்தரா ராகினி என்று அனைவரும் அதை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள். நெய் சேர்த்து செய்ததால் வாசனை தூக்கலாக இருந்தது. இதனால் பொறுக்க முடியாமல் நடேசன் தனக்கும் வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டார். அதில் கொஞ்சம் வசுந்தராவுக்கும் ராகினிக்கும் கொடுத்தார். இதை பார்த்த கோதை கோவத்தில் கத்தினார். சாப்பாடு பசிக்காக சாப்பிட வேண்டும், இப்படி ருசிக்காக சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு தான் என்று கூறி கிளம்பினார். கோதை கோவப்பட்டதால் தமிழும் பயந்தார். அதற்கு அவர் என்ன கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author