Tamizhum Saraswathiyum Today Episode | 11.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் இருப்பவர்கள் தன் மேல் கொண்ட சந்தேகத்தை போக்க வேண்டும் என்று கூறினார். அதற்காக அபி போகும் இடம் எல்லாம் அந்த பிரியாணி பார்சலை வைத்து அவருக்கு வாசனை வரும்படி செய்தார். அபியும் இங்கு சென்றாலும் இந்த வாசனை வருவதாக நினைத்தார். உடனே கோதை இடம் கூறினார். நான் போகும் இடம் எல்லாம் பிரியாணி வாசனை வருவதாக கூறினார். கோதை ஒன்றும் புரியாமல் நின்றார். உடனே நடேசன் இதே போல் சரஸ்வதி அறையிலும் வருவதாக கூறி, நாங்களும் போய் பார்த்தோம். அங்கு ஒன்றுமே இல்லை. உனக்கு பிரியாணி நினைப்பகவே இருப்பதால் உனக்கு அந்த வாசனை வருவதாக கூறினார். கோதையும் சரஸ்வதி அறையில் தேடி பார்த்தது தவறு தான் என்று நினைத்தார். இதை கேட்ட சரஸ்வதி மற்றும் வசுந்தரா அவர்களின் திட்டம் நிறைவேறியது என்று சந்தோசம் கொண்டார்கள். பின் பிரியாணி தமிழுக்கும் எடுத்து வந்து கம்பேனியில் கொடுத்தார். அப்போது கார்த்திக்கை அசிங்க படுத்தும்படி நமச்சி பேசினார். அதை பொருதுக்கொள்ளாமல் தமிழ் அவரை அடுத்துவிட்டார். ஆனாலும் இது எதோ நாடகம் போடுவதாக கார்த்திக் கூறினார். சரஸ்வதி தமிழிடம் இந்த வீட்டில் இருக்கும் கட்டுப்பாடுகளை எடுத்தால் தான் நான் நானாக இருக்க முடியும் என்று கூறினார். காலையில் வீட்டில் உள்ளவர்களை நம்மை எழுப்பும்போது, ஒரு தூக்கம் போட்டால் அது ஒரு சொர்கம் என்று கூறினார். இதை கேட்ட ராகினி தனக்கும் அந்த ஆசை இருக்கிறது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author