தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அதிகாலை நேரத்தில் தூங்குவது சொர்கம் என்று சொன்னதால் ராகினி இன்று அவரும் தூங்க வேண்டும் என்று நினைத்தார். நடேசன் அவரை எழுப்பி பார்த்தார். 6 மணி ஆகியும் ராகினி கண் முளிக்கததால் நடேசன் குச்சி வைத்து அடித்து எழுப்பினார். ராகினி எப்படியும் சரஸ்வதி வந்து இருக்க மாட்டார் என்று நம்பினார். ஆனால் வெளியில் சரஸ்வதியும் தமிழும் இருந்தார்கள். இரவு சரஸ்வதி சொன்னது அனைத்தையும் ராகினி கோதையிடம் கேட்டார். அருகம்புல் ஜுஸ் குடித்த கோதைக்கு எப்படி இருதய நோய் வந்தது என்று கேட்டார். உடனே கோதை யார் இந்த விளக்கம் கொடுத்தது என்று கேட்டார். பின் சரஸ்வதி தான் இப்படி பேசி இருப்பர் என்று தெரிய வந்தது. பின் எனக்கு உடம்புக்கு முடியாமல் போய் இருதய நோய் வரவில்லை. என்னால் தங்கி கொள்ள முடியாத அதிர்ச்சி, நம்பிக்கை துரோகம் என்று அனைத்தையும் சேர்த்து தான் அந்த நோய் வந்தது என்று கூறினார் கோதை. பின் மதிய உணவு சிறுதானியத்தில் செய்தாலும் அதையே நல்ல ருசியாக சாப்பிடலாம் என்று சரஸ்வதி கூறினார். அதை கேட்ட ராகினி, வசுந்தரா இருவரும் அதை சாப்பிட ஆசைப்பட்டார்கள். அதற்கு வசுந்தரா கோதையிடம் அனுமதி வாங்கி தருமாறு கேட்டார் சரஸ்வதி. அதன் படி தயங்கி தயங்கி கோதையிடம் அதை கேட்கவும் செய்தார். அதற்கு கோதை என்ன சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…