ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரை மற்றும் மஹா இருவரும் மாரு வீட்டு விருந்துக்கு அழைக்க அருணாச்சலம் வீட்டுக்கு வந்தார்கள். அங்கு விருந்துக்கு அழைக்க சம்பர்தாயப்படி அழைத்தார் துரை. பின் மூத்த மருமகள் காவ்யா விளக்கு ஏற்றி கற்பூரம் காட்டும்படி பார்வதி கூறினார். காவ்யா தயங்கினார். ஆனால் பிரியா அவரை செய்ய வைத்தார். பின் பார்வதி பெண்களுக்கு பூ கொடுத்தார். ஆனால் அதை காவ்யா மீண்டும் பூஜை அறையிலே வைத்துவிட்டார். இது பார்த்த பார்வதி சங்கடபட்டார். பின் ஜீவா விருந்துக்கு தான் வரவில்லை என்றார். உடனே பார்த்திபன் மற்றும் அருணாச்சலம் எதற்காக வரவில்லை என்று கேட்டார்கள். ஜீவா தனக்கு வேலை இருப்பதாக கூறினார். ஆனால் அருணாச்சலம் இது ஒரு சம்பர்தாயம் இதை செய்யாமல் எதற்கு வேலை. அதை எல்லாம் நான் அர்ஜுன் இடம் கொடுத்துவிட்டேன் என்றார். பார்த்திபன் ஜீவா தயங்குவதை பார்த்து, இது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ந்தந்த திருமணம் தான் அதற்காக எத்தனை நாள் இப்படியே ஒதுங்கி இருக்க முடியும். எதார்த்தத்தை புரிந்து நடந்ததுகொள்ளுமாறு கூறினார். ஜீவா பின் விருந்துக்கு கிளம்பினார். துரை வீட்டில் வந்து இறங்கியதும் சக்தி அவர்களுக்கு ஆர்த்தி எடுத்து வரவேற்றார். காவ்யாவால் நடக்கும் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…