தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியிடம் மதிய உணவு செய்து தமிழுக்கு கொடுத்தார் அபி. ஆனால் அதில் வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்பதை பார்த்து, அதை வேறு விதமாக செய்ய வேண்டும் என்று கூறினார் சரஸ்வதி. அபியும் உடனே சரஸ்வதி சொன்னது போல் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு சமைத்து கொடுத்தார். அதையே கோதை கண்டித்தார். ஆனால் மீண்டும் சரஸ்வதி அதே பொரியலில் பொட்டுக்கடலை அரைத்து போட்டு பின் கரம் மசாலா போட்டு கொண்டுவரும் படி கேட்டுக்கொண்டார். அபியும் அதன் படி செய்தார். பின் அது சாப்பிட்டு பார்த்து சரஸ்வதி அதில் அதிகமான காரம் இருப்ப்பதாக கூறினார். அதனால் அதில் தெங்காப்பூ தூவும்படி கூறினார். மீண்டும் அபியை வேலை வாங்கியதால் நடேசன் கோவத்தில் அவருக்கு வேண்டியதை அவரே சமிக்கட்டும் என்று கூறினார். இந்த வார்த்தைக்காக தான் இவளோ நேரம் திட்டம் போட்டு செய்த காரியம் வெற்றி பெற்றது என்று சதோசத்தில் கீழே இறங்கி வந்தார் சரஸ்வதி. ஆனால் கோதை அவரை சமயல் அறையில் அனுமதிக்கவில்லை. மீண்டும் தன் திட்டம் வீணாகிவிட்டதே என்று கோவிலில் சரஸ்வதி அவரது பாட்டி மின்னல் நமச்சி என்று அனைவரையும் பார்த்து கூறினார். இதனால் பாட்டி அவருக்கு ஒரு பெரிய திட்டம் போட்டு கொடுத்தார். இதுவும் இந்த திருமணம் நடந்தது போல் வேலை செய்யும் என்று பெரிய நம்பிக்கை கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? சரஸ்வதி என்ன செய்தார். காணொளியை பார்க்க…