Raja Rani 2 Today Episode | 18.04.2022 | Vijaytv
Raja Rani 2. 18.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் ஒரு வழியாக பார்வதியின் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று சந்தோசம் கொண்டார். ஆனால் சந்தியா இதே போல் உண்மையை மறைக்காமல் சிவகாமியிடம் நான் படிக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதற்கு அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். பின் சந்தியாவை படிக்க வைத்தார். இவரும் கட்டிலில் அமர்ந்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு கொடுத்தார். அப்போது அவர்கள் அறையில் இருந்து காத்தாடி கீழே விழுந்தது. சரவணன் கையில் வெட்டி இரத்தம் வந்து. அதை பார்த்த சந்தியா பதட்டத்தில் கத்தி வீட்டில் அனைவரையும் கூப்பிட்டார்கள். சிவகாமி சரவணன் கையில் அடி பற்தை பார்த்து பதறினார். மருந்து போட்டு விட்டார்கள், பின் பூஜை அறியாக்கு சென்று சரவணன் மற்றும் சந்தியாவுக்காக வேண்டிக்கொண்டார். அர்ச்சனா இந்த நிலையில் சிவகாமியை குழப்பி விட நினைத்தார். அதனால் சிவகாமி இடம் மீண்டும் சரவணன் சந்தியா இருவரும் கணவன் மனைவியாக வாழவில்லியோ என்று சந்தேகத்தை கிளப்பினார். அதை கேட்ட சிவகாமி மீண்டும் அதை பற்றி யோசிக்க ஆரம்பித்தார். அவர்கள் தூங்குவதை பார்த்து இருவரும் வேறு வேறு திசையில் படுத்து இருப்பதை பார்த்த சிவகாமி, அர்ச்சனா சொல்வது உண்மை தான் என்று நினைத்தார். இதற்கு எப்படியாவது ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தார். ரவி இடம் இதை பற்றி பேசினார். ஆனால் ரவி இதில் நாம் தலை இடாமல் இருப்பது தான் நல்லது என்று கூறினார். அதற்கு சிவகாமி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….