TATA IPL 2022 | RR vs KKR | ‘யஸ்வேந்திர சஹாலின் சுழலில் வீழ்ந்தது கொல்கத்தா’

டாடா ஐபிஎல் 2022-யின் 30 ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது ராஜஸ்தான்.

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லரின் 103(61) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 85(51) கடுமையாக போராடிய போதும் கூட, 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவின் வெற்றி பறிபோனது.

“ ஒரு கட்டத்தில் கொல்கத்தாவே வெற்றி பெறும் என்று நினைத்து இருந்த களத்தில், தீடிரென இறங்கிய சுழல் சூறாவளி சஹால், ஒரே ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் உட்பட நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி களத்தின் சூழலை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார் “

About Author