தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா சமையல் செய்யும்போது லேசாக சுட்டுக்கொண்டார். அதை பார்த்த சந்திரகலா தன் மகளை கொடுமை படுத்துவதாக கத்தி கூப்பாடு போட்டார். சரஸ்வதியும் இந்த வீட்டு மருமகள் தானே, பின் என் மகளை மட்டும் வேலைக்காரி ஆக்கிவிட்டு சரஸ்வதியை மகாராணி போல் வைப்பது என்ன நியாயம் என்று கேட்டார். அதற்கு கோதை, இந்த வீட்டில் இருப்பது ஒரே மருமகள் தான். இந்த வீட்டில் அடுத்த கோதை என அந்தஸ்தையும் பொறுப்பையும் எர்க்க போவது அந்த ஒரு மருமகள் மட்டும் தான். அது உங்கள் மகள் வசுந்தரா தான் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதி மற்றும் தமிழ் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். சந்திரகலா இந்த வீட்டு பொறுப்பு தன் மகளுக்கு வர போவதை கேட்டதும் சந்தோசம் தாங்க முடியவில்லை. உடனே வசுந்தராவை உன் மாமியார் சொல்லும்படி கேட்டு நடந்துகொள் என்று கூறி கிளம்பினார். சரஸ்வதியும் தமிழும் அவர்கள் அறைக்கு வந்து நொந்து கொண்டார்கள். எப்படி சந்திரகலா முன் கோதை இப்படி ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது என்று வருந்தினார்கள். பின் சரஸ்வதி மனசு சரி இல்லை என்று கோவிலுக்கு கிளம்பினார். அங்கு கடவுளிடம் வேண்டும் போது அங்கு சந்திரகலா வந்தார். வந்து சரஸ்வதியை வெறுப்பேற்றும் படி பேசினார். அதற்கு சரஸ்வதி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…