தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் சபதம் நிறைவேற தமிழ் முயற்சியை ஆரம்பித்தார். உடனே நமச்சியுடன் சேர்ந்து திட்டம் போட்டு பேச ஆரம்பித்தார். கார்த்திக் வரும் நேரம் பார்த்து, வசுந்தரா பெரிய வீட்டில் இருந்து வந்து எங்க வீட்டில் இவளோ கஷ்ட படுகிறாள் என்று வருத்தம் கொண்டார். ஆனாலும் இதில் சந்தோசம் என்னவென்றால் தன் மனைவி எந்த வேலையும் செய்யாமல் நிம்மதியாக தூங்கி எழுந்திரிப்பதை மட்டுமே செய்கிறாள். அதில் எனக்கு பெரிய திருப்தி என்றும் கூறினார். வசுந்தரா கஷ்டப்படுவது வருத்தமாக இருந்தாலும் சரஸ்வதி வேலை செய்யாமல் இருப்பது நிம்மதியாக உள்ளது என்று கூறினார். இதை கேட்ட கார்த்திக் கோவத்தில் வீட்டுக்கு கிளம்பினார். உடனே தமிழ் சரஸ்வதிக்கு அழைத்து நடந்ததை சொல்லி வசுந்தராவிடம் பேச வேண்டும் என்று கூறினார். வசுந்தராவிடம் அவர் திட்டத்தை கூறியதும் அவரும் அதற்கு உதவ முடிவு செய்தார். கார்த்திக் வீட்டுக்கு வரும் வழியில் அபி கடையில் இருப்பதை போல் ஒரு நபரை பார்த்தார். உடனே அபி என்று அழைத்து அவர் பின்னாடியே சென்றார். ஆனால் ஒரு இடத்தில் பின் தொடர முடியாமல் போனதால் கோதைக்கு அழைத்தார். அபி வீடு இங்கு உள்ளது என்று விசாரித்தார். ஆனால் அபி இங்கு தான் இருக்கிறார் என்றும் தான் பார்த்ததாகவும் கூறினார் கார்த்திக். இதை கேட்ட சரஸ்வதி உடனே பாட்டிக்கு அழைத்து விஷயத்தை கூறினார். இதனால் உடனே நமச்சி மின்னல் அம்மாவை அதே புடவை உடுத்தி அந்த வலியாக ஆட்டோவின் செல்ல வைத்தார். கார்த்திக்கை குழப்பிவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…