தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை தமிழ் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ள வைக்க பெரிய திட்டம் தீட்டினார்கள். பாட்டி நமச்சி மின்னல் என்று ஆளுக்கு ஒரு திட்டம் கூறினார்கள். ஆனால் எதுவும் நல்லதாக படவில்லை. பின் வசுந்தரா அந்த வீட்டில் இருந்தால் தானே நீ சமையல் அறைக்குள் செல்ல முடியாது. அப்போது வசுவை அவள் அம்மா வீட்டுக்கு 4 நாள் தங்க வைப்போம் என்றார் மின்னல். ஆனால் சரஸ்வதிக்கு அதில் ஈடு பாடு இல்லை. வசுவுக்கு சாப்படில் எதையாவது கலந்து கொடுக்கலாம் என்று நமச்சி சொல்ல கோவத்தில் சரஸ்வதி எதையும் செய்ய வேண்டாம் தானே பார்த்து கொள்வதாக கூறி கிளம்பினார். ஆனால் சரஸ்வதி கிளம்பிய பின் நமச்சி மீண்டும் ஒரு யோசனை சொன்னார். வசுவுக்கு பிரச்சனை வந்தால் தானே சரஸ்வதி கோவபடுவாள் அப்போ அவளின் அம்மா வை தாக்கலாம் என்று கூறினார். உடனே பாட்டியும் இது நல்ல திட்டம் என்றார். அடுத்து நாள் எப்படியாவது சந்திரகலாவை எதாவது செய்து வசுவை சமைக்க விடாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்கான வேலைகளை ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…