வகுப்பறையில் எல்லை மீறும் பள்ளி மாணவர்கள், நடவடிக்கை எடுக்குமா தமிழக கல்வித் துறை?
வகுப்பறைகளிலேயே டிக்டாக் செய்வதும், ஆசியரை வஞ்சிப்பதும், கேளிகளும் கிண்டல்களும் என வர வர தமிழக பள்ளிக்கூடங்கள் கேளிக்கைகளின் கூடாரங்களாக மாறி வருகிறது.
ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டே இருக்கும் போது வகுப்பறையில் வைத்து நடனமாடுவதும், அதை இன்னொரு மாணவன் வீடியோ எடுப்பதும், அதற்கு பின்னர் இன்னொரு வீடியோவில் ஒரு ஆசிரியரை கெட்ட கெட்ட வார்த்தையில் ஒரு மாணவன் வஞ்சிப்பதும் என அரசு பள்ளிக்கூடங்கள் வர வர கேளிக்கைகளின் கூடாரம் ஆகி வருகிறது. நடவடிக்கை எடுக்குமா அரசு என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ ஒரு சமூகத்தை திருத்தும் மொத்த பொறுப்பும் பள்ளிகளிடம் இருக்கும் போது, மாணவர்கள் இப்படி அட்டூழியம் செய்தால் சமூகம் நாளை எந்த நிலையை அடையக் கூடும் என்பதை அரசு இந்த நிலையில் யோசித்தே ஆக வேண்டும் “