தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலாவை பரிசோதனை செய்த டாக்டர் அவரை வீட்டிற்கு போகலாம் என்று கூறினார். மேலும் அவர் உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அந்த சமயம் சரஸ்வதி வசுந்தராவுக்கு அழைத்து பேசினார். அம்மாவுக்கு இப்போது எப்படி உள்ளது என்று விசாரித்தார். வசுந்தரா ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறினார். பின் அம்மாவை விட்டு வர மனது இல்லை என்றும் வருந்தினார். இதனால் சரஸ்வதி தான் ஒரு யோசனை சொல்லவா என்று கேட்டார். பின் வசுந்தரா என்ன என்று கேட்க, சந்திரகலாவை நம் வீட்டுக்கு அழைத்து வருமாறு கூறினார். இதனால் நீயும் இந்த வீட்டு வேலையை பார்க்கலாம் அம்மாவையும் அருகில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதையும் வசுந்தரா தன் அம்மாவிடம் கேட்டார். சந்திரகலா முதலில் தயங்கினாலும் பின் அந்த வீட்டில் இருந்தால் சரஸ்வதி திட்டமும் தெரிய வரும் அதே நேரம் சரஸ்வதி அவமான படுவதை நேரில் பார்க்கலாம் என்று நினைத்தார். அப்போது கோதை மற்றும் நடேசன் இருவரும் மருத்துவமனையில் வந்து பார்த்தார்கள். நலம் விசாரித்தார்கள். அந்த நேரம் வசுந்தரா தயங்கி தயங்கி கொதையிடம் தன் அம்மாவை வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். கோதை இதனால் என்ன தாராளமாக வரடடுமே என்றார். பின் அனைவரும் கோதை வீட்டுக்கு திரும்பினார்கள். சரஸ்வதியும் சந்திரகலாவை நலம் விசாரித்தார். அப்போதும் சரஸ்வதி சமையல் அறைக்கு செல்ல கூடாது என்று கோதை கூறினார். அதை மேலும் அழுத்தமாக சந்திரகலா கூறினார். சற்று நேரத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சந்திரகலாவை தனியாக பார்த்தார்கள். அங்கு சென்று என்ன பேசினார்கள்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…