Tamizhum Saraswathiyum Today Episode | 02.05.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவரின் திட்டம் சந்திரகலா இப்படி தான் இருக்கும் என்று வயூகித்தார். அதனால் அதற்கு எதிராக கோதையை தூண்டி விடும்படி பேசினார். அதனால் மேலும் கோதை அவர் முடிவில் உறுதியாக இருந்தார். பின் தமிழ் வேலைக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்யும் போது தமிழுக்கு கரெண்ட் ஷாக் அடித்தது. ஆனால் நமச்சி அருகில் இருந்ததால் அவரை உடனே காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தமிழுக்கு இப்படி ஒரு விபத்து நடந்ததை நடேசனுக்கு அழைத்து கூறினார் நமச்சி. இதனால் வீட்டில் ஒரே பதட்டம். கோதை ஒன்றும் புரியாமல் நின்றார். சரஸ்வதி தமிழின் குரலை கேட்க ஏங்கினார். பின் மருத்துவமனையில் இருந்து தமிழ் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் தமிழ் ஒரு நிலையில் இல்லை எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறான் என்று நமச்சி கூறினார். கோதை தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார். வசுந்தரா அந்த நேரத்தில் தமிழ் மாமாவுக்கு வேறு எந்த கவலையும் இல்லை தன் அம்மா தன்னிடம் பேசவில்லை என்றால் எப்படி நிதானமாக இருக்க முடியும் என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author